உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டெங்கு, ப்ளூ காய்ச்சலுக்கு தினமும் 5,000 பேர் சிகிச்சை! Dengue | Flu Fever | TN Health Department

டெங்கு, ப்ளூ காய்ச்சலுக்கு தினமும் 5,000 பேர் சிகிச்சை! Dengue | Flu Fever | TN Health Department

டெங்கு, ப்ளூ காய்ச்சலுக்கு தினமும் 5,000 பேர் சிகிச்சை! Dengue | Flu Fever | TN Health Department தமிழகத்தில் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல் பாதிப்புகளால், தினமும் ஆயிரக்கணக்னோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சல் அறிகுறிகளால் மட்டுமே 5,000 பேர் வரை மருத்துவமனைகளில் தினமும் சிகிச்சை பெறுவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்னனர். ப்ளூ வைரஸ்களால் பரவும் இன்ப்ளுயன்ஸா காய்ச்சல், நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது. எனவே இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலை வலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். அதேபோல் கடுமையான காய்ச்சல், தலை வலி, தசை மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட டெங்கு அறிகுறி இருந்தாலும் தாமதிக்காமல் சிகிச்சை பெறுவது அவசியம். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு உள்ளவர்கள் டாக்டர் பரிந்துரைப்படி என்ற ஆன்ட்டி வைரல் மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம். மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதய துடிப்பு, வலிப்பு, சிறுநீர் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் எனவும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை