உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹிஸ்புல்லா தலைவனின் மருமகனை சிரியாவில் வைத்து முடித்த இஸ்ரேல்! | Hezbollah chief Nasrallah

ஹிஸ்புல்லா தலைவனின் மருமகனை சிரியாவில் வைத்து முடித்த இஸ்ரேல்! | Hezbollah chief Nasrallah

ஹிஸ்புல்லா தலைவனின் மருமகனை சிரியாவில் வைத்து முடித்த இஸ்ரேல்! | Hezbollah chief Nasrallah | Son in law | Hassan jaafar attacked | Israel | கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் இருந்து இயங்கும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இரு தரப்புக்குமான போர் ஓராண்டை நெருங்கிவிட்ட நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா இஸ்ரேலை தாக்கியது. இதனால் ஒரே நேரத்தில் ஹமாஸ், ஹிஸ்புல்லா என இரண்டு அமைப்புகள் மீதும் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துகிறது. 100க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பீரங்கிகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்து ஹிஸ்புல்லா முகாம்களை தரைமட்டமாக்கி வருகின்றன. குறிப்பாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் அஸ்திவாரத்தையே இஸ்ரேல் சரித்துவிட்டது. ஹிஸ்புல்லா தலைவர், தளபதிகள் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் செப்டம்பர் 27ல் தாக்குதல் நடத்தி கொன்றது. லெபனானின் ஹிஸ்புல்லா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புகள் ஈரான் ஆதரவில் இயங்குகின்றன. இதனால் ஹிஸ்புல்லா மீது நடக்கும் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது ஈரான். திங்களன்று இரவு 200க்கும் மேற்பட்ட ஈரான் ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கின. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்தது. இஸ்ரேல் அதிபர் உட்பட பலரது பெயரை பயங்கரவாதிகள் என பட்டியலிட்டுள்ளதாக ஈரான் உளவுத்துறை கூறியது. பயங்கரவாதிகள் என அறிவித்துள்ள இஸ்ரேலிய தலைவர்களை தீர்த்துக் கட்டுவோம் எனவும் ஈரான் உளவுத்துறை மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் பக்கம் நிற்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா நிற்கிறது. இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா-ரஷ்யாவின் தலையீடு போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் அல்-காசிர் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் பலியாகி இருக்கிறார். சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் இருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனை ஹிஸ்புல்லா அமைப்பின் நெருங்கிய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. தொடர்ந்து லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதால் பதற்றம் நீடிக்கிறது.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை