கவுன்சிலர் அடாவடி வேலூரில் சம்பவம் vellore dmk councillor traffice police
கவுன்சிலர் அடாவடி வேலூரில் சம்பவம் vellore dmk councillor traffice police argument vellore police crime traffic jam வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். திமுக வைச் சேர்ந்தவர். ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். வேலூர் பெரியார் பூங்கா எதிரே கோட்டை சுற்றுச்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது,. அவ்வழியே காரில் வந்தார். காரை நிறுத்திய போலீசார், ஆவணங்களை கேட்டனர். டாக்குமென்ட் கையில் இல்லை; செல்போனில் இருக்கு என சுதாகர் சொன்னார். காரை ஓரமா நிறுத்திட்டு காட்டுங்க என போலீசார் சொன்னதும் சுதாகர் ஆவேசமானார். காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். நடுரோட்டில் கார் நின்றதால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. அங்கிருந்த இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுக்கத் துவங்கினர். நான் எஸ்பி கிட்ட பேசிக்கிறேன் என போலீசுடன் சுதாகர் வாக்குவாதம் செய்தபோது, இன்ஸ்பெக்டர் வந்து விட்டார். நீங்க யார்கிட்டயும் பேசுங்க முதல்ல வண்டியை ஓரமா விடுங்க இல்லன்னா வண்டிய பறிமுதல் பண்ண வேண்டி வரும் என எச்சரித்த பிறகே, சுதாகர் காரை ஓரம் கட்டினார்.