நாம் ஒன்றிணைந்தால் அவர்களின் பிளான் உடையும்! | PMModi | Congress |Modi Speech|PM Modi in Maharashtra
மஹாராஷ்டிராவின் வாஷிம், மும்பை மற்றும் தானேயில் 50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். வாஷிமில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை தொடர்பான 23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை மோடி துவக்கி வைத்து பேசினார். நவராத்திரி கொண்டாடும் புனிதமான நேரத்தில், கிசான் சம்மன் நிதியின் 18வது தவணையை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதன் மூலம் 9.5 கோடி பேர் 20 ஆயிரம் கோடி நிதி பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவின் இரட்டை என்ஜின் அரசும், விவசாயிகளுக்கு இரட்டிப்பு நன்மைகளை வழங்குகிறது. நமோ ஷேத்காரி மகாசம்மன் நிதி திட்டத்தின் கீழ், மகாராஷ்டிராவின் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சுமார் 1900 கோடி வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் கோடிக்கணக்கில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் முக்கிய குற்றவாளி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் விரும்புகிறது. அர்பன் நக்சல்கள் இணைந்து காங்கிரசை இயக்குகின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், நாட்டைப் பிரிக்கும் அவர்களின் திட்டம் தோல்வியடையும். இது காங்கிரசுக்கும் தெரியும். மக்கள், காங்கிரசின் ஆபத்தான திட்டத்தை தோற்டிக்க வேண்டும். இந்தியாவுக்கு நல்ல பெயர் கிடைக்க கூடாது என நினைப்பவர்களுடன் இணைந்து காங்கிரஸ் செயல்படுகிறது என்றார்.