மேற்காசியாவில் பதற்றம்: ஈரான் தூதர் பரபரப்பு பேட்டி India Israel relation Iran's Ambassador
மேற்காசியாவில் பதற்றம்: ஈரான் தூதர் பரபரப்பு பேட்டி India Israel relation Irans Ambassador to India interview PM Modi West Asia conflict hezbollah| israel hamas war இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் 2023 அக்டோபர் 7 ம்தேதி போர் துவங்கியது. இதுவரை பல ஆயிரம் பேர் மாண்டு விட்டனர். போர் துவங்கி ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், லெபனானில் இருந்து செயல்படும் ெஹஸ்புலா அமைப்பும் ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதலை துவங்கியது. இஸ்ரேல் கொடுத்த பதிலடியில் தலைவர் ஹசன் நஸ்ரல்லா முதல் பல முக்கிய தளபதிகள் வரை இழந்து நிராயுதபாணியாக ெஹஸ்புலா நிற்கும் நிலையில், அதற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியது. பெரும்பாலான ஏவுகணைகளை நடுவானிலேயே தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், அந்த ஏவுகணைகள் இலக்கை தாக்கியதாக ஈரான் கூறுகிறது. ஈரானுக்கு சரியான பதிலடி கொடுக்க இஸ்ரேல் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், ஈரான் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமெனி கடும் எச்சரிக்கை விடுத்தார். ஹமாசும்; ெஹஸ்புலாவும் இஸ்ரேலை தாக்கியதில் நியாயம் இருக்கிறது; தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பில் இருந்து காக்க அவர்கள் போராடுகிறார்கள்; ஈரானை தாக்கினால் இஸ்ரேல் அழிவது நிச்சயம் என கமெனி ஆவேசமாக பேசினார். போர் தீவிரமாகி கொண்டே போவதால் மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த சூழலில், இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி டில்லியில் பேட்டியளித்தார். இந்தியா ஒரு சக்திவாய்ந்த நாடு. இஸ்ரேலுடன் நெருக்கமான உறவு வைத்துள்ளது. அதேபோல மேற்கத்திய நாடுகளிடமும் நல்ல செல்வாக்கு உள்ளது. அந்த செல்வாக்கை பயன்படுத்தி போரை நிறுத்தும்படி இஸ்ரேலை இந்தியா அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.