400 ஹிஸ்புல்லா கதை முடித்த இஸ்ரேல் அஸ்திரம்-என்ன நடந்தது | Israel vs Hezbollah | Hassan Nazrallah |
400 ஹிஸ்புல்லா கதை முடித்த இஸ்ரேல் அஸ்திரம்-என்ன நடந்தது | Israel vs Hezbollah | Hassan Nazrallah | Iran | US லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து 3 வாரமாக இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய பேஜர் அட்டாக், வாக்கி டாக்கி அட்டாக்கை தொடர்ந்து ஹிஸ்புல்லாவுடன் போர் மூண்டது. தெற்கு லெபனான், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தொடர் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வந்தது. ஹிஸ்புல்லாக்களின் பதுங்கு குழி, ஆயுத கிடங்குகள், இதர கட்டமைப்புகள் என 2000 இலக்குகளை அழித்தது. இந்த நிலையில் தான் செவ்வாய்க்கிழமை தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் துவங்கியது. எல்லையை ஒட்டிய ஊர்களில் தீவிர தேடுதல் வேட்டையில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. தரைவழி தாக்குதலை துவங்கிய பிறகு ஹிஸ்புல்லாக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து வருவதாக இஸ்ரேல் கூறி உள்ளது. இதுவரை நடந்த 4 நாள் தரைவழி தாக்குதலில் மட்டும் 400 ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளி இருக்கிறோம். இதில் 12 பேர் படை தளபதிகள், 8 பேர் பயங்கரவாத அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் என்று இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. ஏராளமான பதுங்கு குழிகள், சுரங்கங்களை தகர்த்து விட்டோம். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் விட்டு சென்ற துப்பாக்கி, குண்டுகளை ஏராளமாக கைப்பற்றி உள்ளோம் என்றும் கூறியது. குறிப்பாக மருத்துவமனை வளாகம் ஒன்றில் இருந்த மசூதியில் திரளான ஹிஸ்புல்லாக்கள் பதுங்கி இருந்தனர். 2 மணி நேரம் நடந்த சண்டையில் பதுங்கி இருந்த எல்லா பயங்கரவாதிகளையும் சுட்டுத்தள்ளி விட்டோம். இஸ்ரேலின் ஒரே ஒரு வீரருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. மசூதியை தங்களின் பிரதான ஆப்ரேஷன் சென்டராக ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தி வந்தனர். இஸ்ரேலுக்கு எதிரான எல்லா சதி திட்டங்களையும் மசூதியில் கூடி தான் ஹிஸ்புல்லாக்கள் ஆலோசித்துள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது. லெபனானில் இஸ்ரேல் இதுவரை நடத்திய அனைத்து விதமான தாக்குதல்களிலும் சேர்த்து மொத்தம் 2000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த சண்டையின் உச்சமாக ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது. தெற்கு லெபனானில் இருந்து மட்டும் இதுவரை 15 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடம் தேடி குடிபெயர்ந்துள்ளனர்.