வேளச்சேரி ஸ்டேஷனில் திரண்ட கட்டுக்கடங்காத கூட்டம் Air show chennai velacherry railway station
வேளச்சேரி ஸ்டேஷனில் திரண்ட கட்டுக்கடங்காத கூட்டம் Air show chennai velacherry railway station சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு துவங்கியது. சாகச நிகழ்ச்சியை காண வேளச்சேரி ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் காலை 10 மணிவாக்கில் திரண்டனர். ரயிலில் மக்கள் முண்டியடித்து ஏறிச் செல்லும் வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலர் ரயிலில் ஏற முடியாமல் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். மெரினாவில் மதியம் 1 மணி வரை நடந்த விமான சாகச நிகழ்ச்சியை லட்சக்கணக்கானவர்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் பறக்கும் ரயிலை பிடித்து ஆயிரக்கணக்கான மக்கள் வேளச்சேரிக்கு திரும்பினர். வேளச்சேரி ரயில் நிலையத்தில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறங்கியதால் வேளச்சேரி ரயில் நிலையம் மீண்டும் ஸ்தம்பித்தது. இப்படி இறங்கிய மொத்த பேரும் வேளச்சேரி ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த வாகனங்களை ஒரே சமயத்தில் எடுத்துச் சென்றதால் வேளச்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் மக்கள் அவதிப்பட்டனர். ஏர் ேஷா நடப்பதை முன்னிட்டு வேளச்சேரி டு சிந்தாதிரிப்பேட்டை இடையே கூடுதல் பறக்கும் ரயில்களை ரயில்வே விடவில்லை. அதனால்தான் ரயிலில் ஏற மக்கள் முண்டியடித்துள்ளனர். அதுமட்டுமல்ல; வேளச்சேரி ரயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக கூடுதலாக போலீசாரும் நிறுத்தப்படவில்லை. இதுதான் ஏர் ேஷாவுக்கு முன்னும் பின்னும் மக்கள் வேளச்சேரி ரயில் நிலையத்தில் பட்ட கஷ்டங்களுக்கு காரணம் என ஏர் ேஷாவை பார்த்தவர்களும் பார்க்க முடியாமல் வீடு திரும்பியவர்களும் குற்றம்சாட்டினர். கூடுதல்ரயில், போலீஸ் பாதுகாப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது ஏன்? என ரயில்வே அதிகாரிகளை கேட்டபோது, இந்தளவுக்கு கூட்டம் வரும் என எதிர்பார்க்கவில்லை என மழுப்பலாக பதிலளித்தனர். சென்னையில் சாலைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து சற்று குறைவாக இருக்கும். ஆனால், ஏர் ேஷாவால் இன்றைய நிலை முற்றிலும் மாறுபட்டு பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.