மக்கள் உயிர் உங்களுக்கு அவ்வளவு அலட்சியமா? | Annamalai | TNBjp | MKStalin | Air Show | Chennai
மக்கள் உயிர் உங்களுக்கு அவ்வளவு அலட்சியமா? | Annamalai | TNBjp | MKStalin | Air Show | Chennai பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை; மெரினா பீச்சில் நடந்த வான் சாகச நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் இறந்தும், 200க்கும் அதிகமானோர் அட்மிட் ஆகி உள்ளதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். திமுக அரசு அடிப்படை வசதிகளையும், போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்யாமல் எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம். ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக செய்யும் ஏற்பாடுகளை கூட பல லட்சம் மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு செய்யவில்லை என்பது அவரது நிர்வாகத்தின் முழு தோல்வியை காட்டுகிறது. 5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. அடிப்படை ஏற்பாடுகளை கூட செய்யாமல் புறக்கணித்த திமுக அரசே இதற்கு முழு பொறுப்பு. தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி மக்கள் உயிர் குறித்து எந்த கவலையும் இல்லாமல் 5 பேர் இறப்புக்கும் , பல குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதல்வர் ஸ்டாலினையும் , திமுக அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களுக்கு ஸ்டாலின் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என அண்ணாமலை கூறி உள்ளார்.