உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மெரினா நெரிசலில் மயங்கியவரை தாமதமாக ஏற்றிய ஆம்புலன்ஸ் | Heavy traffic | Marina crowd

மெரினா நெரிசலில் மயங்கியவரை தாமதமாக ஏற்றிய ஆம்புலன்ஸ் | Heavy traffic | Marina crowd

சென்னை மெரினா பீச்சில் நேற்று நடந்த இந்திய விமானப்படை வீரர்களின் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் புறப்பட்டதால் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வீட்டுக்கு செல்ல முடியாமல் பசியில் நீண்ட நேரம் சாலையில் தவித்த மக்கள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் அவதி அடைந்தனர். சிலர் வெயில் தாங்காமல் மயக்கம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 5 பேர் அடுத்தடுத்து இறந்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற மக்கள் நெரிசலில் சிக்கியதும், 5 பேர் இறந்திருப்பதும் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இறந்துபோன 5 பேரில் சென்னை கொருக்குபேட்டை அனந்தநாயகி நகரை சேர்ந்த 56 வயது ஜான் என்பவரும் ஒருவர். அவர் மயங்கியதும் ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு ஏற்றி சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். ஆம்புலன்ஸ் தாமதமாக அழைத்து வந்ததே ஜான் இறக்க காரணம் என அவரது மருமகள் கூறினார்.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ