உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட திடுக் வீடியோ | Israel vs Hamas | Hezbollah | october 7 attack video

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட திடுக் வீடியோ | Israel vs Hamas | Hezbollah | october 7 attack video

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட திடுக் வீடியோ | Israel vs Hamas | Hezbollah | october 7 attack video மத்திய கிழக்கில் இப்போது தீவிரமாக நடக்கும் இஸ்ரேல்-ஹெஸ்புலா சண்டைக்கு அச்சாரமிட்டது இஸ்ரேல்-ஹமாஸ் போர் தான். கடந்த ஆண்டில் இதே அக்டோபர் 7ம் தேதி தான் அந்த போர் துவங்கியது. அன்று யூதர்களுக்கு பண்டிகை நாள். இஸ்ரேல் முழுதும் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. அப்போது தெற்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஊடுருவினர். அங்கு நடந்த இசை நிகழ்ச்சிகளை குறி வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஒரே நேரத்தில் பல நூறு ஏவுகணை, ராக்கெட் குண்டுகளை இஸ்ரேல் மீது போட்டனர். இந்த கொடூர தாக்குதலில் ஒரே நாளில் 1200 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க தான் காசாவில் ஹமாசுக்கு எதிரான போரை இஸ்ரேல் துவங்கியது. இதுவரை காசாவில் 42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 22 லட்சம் பாலஸ்தீனிய மக்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் போர் இன்று 2வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், முதல் நாள் ஹமாஸ் நடத்திய தாக்குதலை நினைவுகூரும் விதமாக இதுவரை வெளிவராத காட்சிகளை வீடியோவாக இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் டிரோனை குறி வைத்து ஹமாஸ் பயங்கரவாதி சரமாரியாக சுடும் காட்சியும், ஸ்டெரோட் என்ற இடத்தில் இஸ்ரேல் போலீஸ் ஸ்டேஷனை ஹமாஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றி தாக்கிய காட்சியும் வெளியாகி உள்ளது. அதே போல் கிப்புட்ஸ் ரெய்ம் என்ற இடத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் 364 பேரை ஹமாஸ் பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர். அந்த இடத்தில் இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தும் காட்சியும் வெளியிடப்பட்டுள்ளது.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை