அடுத்தடுத்து ஷாக் தரும் ஹரியானா ரிசல்ட் | Haryana Election | Bjp | Congress | Julana | Vinesh Phogat
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டு எண்ணிக்கையில் முதல் கட்டமாக காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றது. ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய நட்சத்திர வேட்பாளரும் ஒலிம்பிக் வீராங்கனையுமான வினேஷ் போகத் ஆரம்பம் முதல் முன்னிலை வகித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் யோகேஷ் குமார் பின்னடைவை சந்தித்தார். இந்த சூழலில் திடீரென பாஜ வேகமாக முன்னிலைக்கு முன்னேறியது. மெஜாரிட்டிக்கு தேவையான 46 இடங்களுக்கும் மேல் பாஜ முன்னிலை வகித்து வருகிறது. தொடர் முன்னிலையில் இருந்த வினேஷ் போகத்தும் சிறிய சறுக்கலை சந்தித்து உள்ளார். பாஜ வேட்பாளர் யோகேஷ் குமார் 2000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வினேஷை முந்தி உள்ளார்.