தமிழகம், கேரளாவுக்கு மஞ்சள் அலர்ட் | Heavy Rain alert | IMD | Tamilnadu | Kerala
தமிழகம், கேரளாவுக்கு மஞ்சள் அலர்ட் | Heavy Rain alert | IMD | Tamilnadu | Kerala தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு, 4 நாட்களில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி கேரளாவில் 14ம் தேதி வரை மழை பெய்யும். கேரளாவின் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, வேலூர், கள்ளக்குறிச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடப்பட்டது. நாளை 11 மாவட்டங்களுக்கும், 12ம் தேதி 13 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் 12ம் தேதி வரை சூறாவளி வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.