உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் கூறிய புகார் Congress complaints| Haryana election| ECI

தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் கூறிய புகார் Congress complaints| Haryana election| ECI

தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் கூறிய புகார் Congress complaints| Haryana election| ECI ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜ, தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. காங்கிரஸ் தான் ஜெயிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறியிருந்த நிலையில், பாஜவின் வெற்றியை காங்கிரசார் ஏற்க மறுக்கின்றனர். ஓட்டு தேர்தல் எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறும் அவர்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டிலும் சந்தேகம் கிளப்பினர். இது தொடர்பாக டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஹரியானா காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புகார் அளித்தனர். அவர்களின் ஒருவரான பவன் கேரா கூறும்போது, 7 சட்டசபை தொகுதிகளில் இருந்து பெறப்பட்ட புகாரை அளித்துள்ளோம். இன்னும் 13 தொகுதிகளின் புகார்கள் அளிக்கப்படும். EVM எனப்படும் மின்னணு ஓட்டு இயந்திரத்தின் பேட்டரிகள் தொடர்பாக எங்கள் வேட்பாளர்கள் புகார் எழுப்பி இருக்கிறார்கள். ஓட்டு எண்ணிக்கையின் போது இருந்த மிஷின்களில் பெரும்பாலான மிஷன்களின் பேட்டரி அளவு 60-70 சதவீதம் வரை இருந்தன. ஆனால், சில மிஷன்களின் பேட்டரி அளவு 99 சதவீதம் வரை இருந்தது. அதில்தான் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. விசாரணை முடியும் வரை அந்த இயந்திரங்களை மட்டும் பாதுகாப்பாக வைத்திருக்க கேட்டுள்ளோம் என்றார். ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பான் கூறும்போது, நாள் முழுவதும் EVM மிஷன்கள் பயன்படுத்தும்போது, அவற்றின் பேட்டரிகள் குறைவது இயல்பு. 99 சதவீதம் இருக்க வாய்ப்பு இல்லை. EVMகள் எப்படி ஹேக் செய்யப்பட்டன என்ற விஷயங்களை தேர்தல் கமிஷனிடம் சொல்லியிருக்கிறோம். ஹரியானா முதல்வர் நயாப் சைனி, எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டோம்; ஆட்சியை அமைப்போம் என்று அப்போதே சொன்னார். அது இதுதானா என சந்தேகம் வருகிறது என்றார்.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ