உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாடு முன்னேற அக்கறை: அம்பானி, சுந்தர் பிச்சை புகழாரம் Ratan Tata dies

நாடு முன்னேற அக்கறை: அம்பானி, சுந்தர் பிச்சை புகழாரம் Ratan Tata dies

நாடு முன்னேற அக்கறை: அம்பானி, சுந்தர் பிச்சை புகழாரம் Ratan Tata dies Mukesh Ambani nita ambani Sundar Pichai ceo google reliance industries தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இரங்கல் தெரிவித்துள்ளார். ரத்தன் டாடாவின் மறைவு டாடா குழுமத்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியருக்கும் பெரும் இழப்பாகும். தனிப்பட்ட அளவில், ரத்தன் டாடாவின் மறைவு, எனக்கு ஒரு அன்பான நண்பரை இழந்தது போன்றது. ரத்தன் டாடா ஒரு தொலைநோக்கு தொழிலதிபர் மற்றும் ஒரு வள்ளல். அவர் சமூகத்தின் சிறந்த நன்மைக்காக எப்போதும் பாடுபட்டார். அவரது மறைவால், இந்தியா தனது சிறந்த மற்றும் கனிவான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவர் இந்தியாவை உலகிற்கு எடுத்துச் சென்றார். உலகின் சிறந்ததை நமது நாட்டுக்கு கொண்டு வந்தார். ரிலையன்ஸ், நீடா மற்றும் அம்பானி குடும்பத்தின் சார்பாக, டாடா குடும்பத்துக்கும், டாடா குழுமத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள இரங்கலில்,இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்க ஆழ்ந்த அக்கறையுடன் இருந்தவர் ரத்தன் டாடா என தெரிவித்து உள்ளார். கூகுள் நிறுவனத்தில் வைத்து கடைசியாக அவரை சந்தித்து பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. வெய்மோவின் முன்னேற்றம் பற்றி நாங்கள் பேசினோம். அவருடைய தொலைநோக்கு பார்வை கேட்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது. அவர், ஒரு அசாதாரண வர்த்தகம் மற்றும் கொடைத்தன்மைக்கான மரபை விட்டு சென்றிருக்கிறார். இந்தியாவில் நவீனத்துவ தொழிலை வழிநடத்தி செல்வதற்கும், மேம்படுத்துவதற்கும் ஏதுவாக உதவியாக இருந்தவர். அவருடைய அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார்.

அக் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை