உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கை கூடாமல் போன ரத்தன் டாடாவின் காதல் Rathan tata| tata group

கை கூடாமல் போன ரத்தன் டாடாவின் காதல் Rathan tata| tata group

கை கூடாமல் போன ரத்தன் டாடாவின் காதல் Rathan tata| tata group தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிற தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகையான சிமி கரேவால்-ம் ரத்தன் டாடாவுக்காக எக்ஸ் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிவிட்டார். இது பிற பாலிவுட் பிரபலங்களின் அஞ்சலி போல் அல்லாமல், சிமி- ரத்தன் இடையிலான நட்பை வெளிப்படுத்தும் மிகவும் தனிப்பட்ட பதிவு. வெகு காலத்திற்கு முன்னர் இருவரும் காதல்வயப்பட்டு பின் பிரிந்தனர். சமூக வலைதளங்களில் எப்போதாவதுதான் பதிவிடும் நடிகை சிமி கரேவால், இந்தமுறை ரத்தன் டாடாவுக்காக அஞ்சலி செலுத்தி இருக்கிறார். நீங்கள் போய்விட்டீர்கள் என்று சொல்கிறார்கள். உங்கள் இழப்பை தாங்கி கொள்வது என்பது மிகவும் கடினமானது. மிகவும் கடினம். பிரியாவிடை நண்பரே என சிமி பதிவிட்டு உள்ளார். பாலிவுட்டில் நடிகை சிமி பிசியாக இருந்த காலத்தில், அவரும் ரத்தன் டாடாவும் நெருங்கி பழகி வந்தனர். அதன் பின் பிரிந்தனர். இருந்தபோதும், இருவரும் நண்பர்களாகவே இருந்தனர். 2011ல் ரத்தன் டாடா பற்றி ஒரு பேட்டியில் நடிகை சிமி கிரேவால் கூறியிருந்தார். ரத்தன் டாடா பர்பெக்ட் ஜென்டில்மேட், நகைச்சுவை உணர்வு மிக்கவர், அடக்கமானவர், பணம் ஒருபோதும் அவரது உந்துசக்தியாக இருந்தது இல்லை என கூறியிருந்தார். ஒருமுறை, நடிகை சிமி நடத்திய டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரத்தன் டாடா, 4 முறை திருமணம் செய்யும் நிலைக்கு சென்று, அது நிறைவேறாமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளன என சிரித்து கொண்டே வெளிப்படையாக சொன்னார் டாடா

அக் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி