வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு! | Heavy rains in TN | cyclonic circulation | Bay of
வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு! | Heavy rains in TN | cyclonic circulation | Bay of Bengal தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இது தீவிரமடைந்து வங்க கடலில் வரும் 14 அன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி தமிழகத்தை நோக்கி நகரவும் வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் 16ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறி உள்ளது. கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 14, 15 ,16 தேதிகளில் தமிழகத்துக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடப்பட்டு உள்ளது. 14ல் விழுப்புரம், கடலூர், 15ல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், 16ல் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக, ஏற்கனவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. காரைக்குடியில் அதிகபட்சமாக நேற்று 154 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.