உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல்-ஹெஸ்புலா சண்டை அடுத்த கட்டம்! வெற்றி யாருக்கு? | Israel vs Hezbollah | Netanyahu | IDF

இஸ்ரேல்-ஹெஸ்புலா சண்டை அடுத்த கட்டம்! வெற்றி யாருக்கு? | Israel vs Hezbollah | Netanyahu | IDF

இஸ்ரேல்-ஹெஸ்புலா சண்டை அடுத்த கட்டம்! வெற்றி யாருக்கு? | Israel vs Hezbollah | Netanyahu | IDF லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புலா பயங்கரவாதிகளை குறி வைத்து ஒரு மாதமாக இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையின் உச்சமாக ஹெஸ்புலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது. நஸ்ரல்லா கொலைக்குப் பிறகு சண்டை முற்றியது. முதலில் வான்வழி தாக்குதலில் மட்டும் ஈடுபட்ட இஸ்ரேல், பின்னர் தெற்கு லெபனான், தென்மேற்கு லெபனானில் தரைவழி தாக்குதலையும் ஆரம்பித்தது. இதற்கிடையே இஸ்ரேல் மீது ஹெஸ்புலா பயங்கரவாதிகள் சரமாரியாக குண்டு வீசத் துவங்க இருக்கின்றனர். குறிப்பாக வடக்கு இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி வருகின்றனர். தினமும் 50 முதல் 100 ராக்கெட் குண்டுகள் வரை வீசப்படுகிறது. அவ்வப்போது ட்ரோன் அட்டாக்கையும் ஹெஸ்புலா பயங்கரவாதிகள் நிகழ்த்தி வருகின்றனர். இஸ்ரேலுக்கு பெரிய இழப்பு இல்லை என்றாலும் வடக்கு நகரங்களின் குடியிருப்பு உள்ளிட்ட இதர கட்டமைப்புகளை பயங்கரவாதிகளின் வெடிகுண்டு சேதப்படுத்தி இருக்கிறது. இது இஸ்ரேலுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஹெஸ்புலா பயங்கரவாத அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய இடத்தை ஹெஸ்புலா பயங்கரவாத அமைப்பின் ஊடக தலைவர் முகமது அஃபிப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை நாங்கள் நடத்திய தாக்குதல் வெறும் ஆரம்பம் தான். இஸ்ரேல் இதுவரை கண்டது எங்கள் தாக்குதல் வலிமையின் மிகச் சிறிய பகுதி தான் என்றார். எங்கள் பிரதான இலக்கே இஸ்ரேல் ராணுவத்தை தோற்கடிப்பது தான். அதே நேரம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுப்பது தொடர்பான எந்த விதமான பேச்சுவார்த்தைக்கும் ஹெஸ்புலா தயாராக உள்ளது. சண்டையை நிறுத்த எந்த நாடு முயற்சி எடுத்தால் அதை நாங்கள் வரவேற்போம் என்றும் முகமது அஃபிப் சொன்னார். அதே நேரம் வடக்கு இஸ்ரேலில் தாக்குதலை தீவிரப்படுத்த ஹெஸ்புலா தயாராகி வருகிறது. அங்குள்ள நகரங்களில் ராணுவ முகாம்களுக்கு பக்கத்திலோ ராணுவ வீரர்கள் தொடர்புடைய இடங்களுக்கு பக்கத்திலோ மக்கள் வாசித்தால் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஹெஸ்புலா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ஹெஸ்புலாவை வேரோடு பிடுங்கி எறியும் வரை சண்டையை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சொல்லியிருந்த நிலையில், இப்போது ஹெஸ்புலாவும் அதே போன்று சபதம் எடுத்திருப்பதால் இந்த சண்டை இன்னும் தீவிரமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ