விளாசிய ராகுல் டென்ஷன் ஆன முருகன் rahul Gandhi L.Murugan union minister train accident tamilnadu mys
விளாசிய ராகுல் டென்ஷன் ஆன முருகன் rahul Gandhi L.Murugan union minister train accident tamilnadu mysuru darbhanga express மைசூருவில் இருந்து பீஹார் மாநிலம், தர்பங்காவுக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் கவரைப்பேட்டை அருகே லூப் லைனில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் பலர் காயமடைந்தனர். ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்தை போலவே இந்த சம்பவமும் நடந்துள்ளது என வல்லுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்கட்சி தலைவர் ராகுல் பாய்ந்துள்ளார். மைசூரு-தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசா பாலாசூர் விபத்தை போலவே நடந்துள்ளது. பயணிகள் ரயில் நின்றிருந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. பல விபத்துகளில் பல உயிர்கள் பலியாகி விட்ட பிறகும், மத்திய அரசு இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இந்த அரசு விழித்துக் கொள்வதற்குள் இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டியிருக்குமோ? என ராகுல் கூறியுள்ளார். பொறுப்பு உயர் மட்டத்தில் இருந்து துவங்க வேண்டும் எனவும் கூறிய ராகுல், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டுமென மறைமுகமாக சொன்னார். ராகுலின் கருத்துக்கு மத்திய அமைச்சர் முருகன் பதிலடி கொடுத்தார்.