கவரைப்பேட்டை ரயில் விபத்தில் முக்கிய திருப்பம்-பரபரப்பு | Mysuru-Darbhanga Train Accident | Kavaraip
கவரைப்பேட்டை ரயில் விபத்தில் முக்கிய திருப்பம்-பரபரப்பு | Mysuru-Darbhanga Train Accident | Kavaraipettai மொத்த தமிழகத்தையும் உலுக்கிப்போட்டுள்ளது கவரைப்பேட்டை ரயில் விபத்து. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக பீகார் மாநிலம் தர்பங்கா வரை செல்லும் பாக்மதி ரயில் கவரைப்பேட்டையில் நேற்று இரவு விபத்துக்குள்ளானது. மெயின் லைனில் செல்ல வேண்டிய சரக்கு ரயில், லூப் லைனில் நின்ற சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. ஒரு பெட்டி தீப்பிடித்தது. 12 பெட்டிகள் தடம்புரண்டன. 19 பேர் காயம் அடைந்தனர். நல்லவேளையாக உயிர் சேதம்இல்லை. மெயின் லைனில் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனில் சென்றது தான் விபத்துக்கு காரணம் என்பது உறுதியானது. ஆனால் சிக்னலில் எந்த பிரச்னையும் இல்லை. எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் செல்வதற்கான க்ரீன் சிக்னல் துல்லியமாக விழுந்தது. பிறகு எப்படி அந்த ரயில் லூப் லைனுக்குள் நுழைந்தது என்பது தான் இப்போது இருக்கம் விடை தெரியாத கேள்வி. இதில் ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள், தண்டவாள பராமரிப்பாளர்கள் யாரேனும் அஜாக்கிரதையாக செயல்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் உள்ளது. அதே நேரம் இந்த சம்பவத்தில் ஏதேனும் சதி இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. காரணம் விபத்து நடந்த இடத்தில் தண்டவாள இணைப்பு கம்பிகள் கழன்று கிடந்தன. விபத்து ஏற்பட்டதால் இது நடந்ததா அல்லது சமூக விரோதிகள் முன்கூட்டியே இணைப்பை துண்டித்தனரா என்பது தெரியவில்லை. சமீபத்தில் தான் கவரைப்பேட்டைக்கு முந்தைய பொன்னேரி பகுதியி்ல் தண்டவாள கம்பிகளை சிலர் கழற்றி போட்டனர். எனவே சதிக்கும் வாய்ப்பு இருப்பதால் என்ஐஏ விசாரணையை துவங்கி உள்ளது. அடுத்த அதிரடியாக ரயில்வே ஊழியர்கள் 13 பேருக்கு ரயில்வே நிர்வாகம் சம்மன் அனுப்பியது. கவரைப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனிபிரசாத் பாபு, லோகோ பைலட் சுப்பிரமணியன் மற்றும் உதவி லோகோ பைலட், மோட்டார் மேன், கவரைப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி மற்றும் கவரைப்பேட்டை சிக்னல் ஆபரேட்டர்கள் 2 பேர் உட்பட 13 பேருக்கு சம்மன் போனது. சென்னை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் வைத்து கோட்ட மேலாளர் தலைமையில் விசாரணை நடக்கிறது.