பாஜ வென்ற 20 இடங்களில் மிகப்பெரிய சதி! காங்கிரஸ் பகீர் | Haryana Election Result | BJP vs Congress
ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவு காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாம் காங்கிரஸ் தான் இந்த முறை ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும் என்று அடித்துக் கூறின. ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் காங்கிரஸ் கை ஓங்கியது. காங்கிரஸ் அலுவலகங்கள் தோறும் வேற்றிக்கொண்டாட்டம் நடந்தது ஆனால் ஓரிரு மணி நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. பல இடங்களில் பாஜ ஜெட் வேகம் எடுத்தது. முடிவில் பாஜ அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 இடங்களில் 48 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் 37 இடங்களில் சுருண்டது. இந்த தோல்வியை காங்கிரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓட்டு எண்ணிக்கை நாளில் தோல்வி உறுதியானதும், தேர்தல் கமிஷன் மீது பழி சுமத்தியது.