உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கர்நாடகாவில் அரசு நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம் Priyank Kharge|Rahul Kharge |Congress

கர்நாடகாவில் அரசு நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம் Priyank Kharge|Rahul Kharge |Congress

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான முடாவுக்கு சொந்தமான 14 பிளாட்டுகள், முதல்வரின் மனைவி பெயரில் சட்ட விரோதமாகமாக ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், பிரச்னையை முடிக்க நினைத்த சித்தராமையா மனைவி தரப்பு தனக்கு ஒதுக்கிய நிலத்தை திரும்ப ஒப்படைப்பதாக கூறியது. இதற்கிடையே பெங்களூரு ஏரோஸ்பேஸ் பார்க் பகுதியில், திறன் மேம்பாட்டு மையம் அமைக்க, தனியார் அறக்கட்டளைக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியது அடுத்த சர்ச்சையை கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவரது மனைவி, மகன்கள், மருமகன் உள்ளிட்டோர் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருந்து அதை நிர்வகிக்கின்றனர். கார்கே குடும்பத்தால் நடத்தப்படும் அறக்கட்டளைக்கு, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு சாதகமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பாஜ குற்றம் சாட்டியது. இதனால் தேவையில்லாத சர்ச்சையை தவிர்க்க, தங்களுக்கு ஒதுக்கிய நிலத்தை திருப்பி ஒப்படைப்பதாக தொழில் அதிபரும் கார்கேவின் மகனுமான ராகுல் கார்கே கூறியுள்ளார்.

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ