சென்னையில் அடுத்த பேய் மழை... இடியை இறக்கிய வெதர்மேன் | Chennai rain | Tamilnadu Weatherman | flood
சென்னையில் அடுத்த பேய் மழை... இடியை இறக்கிய வெதர்மேன் | Chennai rain | Tamilnadu Weatherman | flood வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை மாநகரமே ஸ்தம்பித்து விட்டது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ரோடுகள் ஆறுகளாக மாறி விட்டன. தெருக்கள் குளங்களாக காட்சி அளிக்கின்றன. பஸ் ஸ்டாண்ட், மைதானங்கள் கடல் போல் மாறி விட்டன. சில இடங்களில் மழை நின்று விட்டது. சில இடங்களில் விட்டு விட்டு பெய்கிறது. நாளை வரை கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், சென்னைவாசிகளை அதிரவைக்கும் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறி இருப்பதாவது: மேகம் வலு இழந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. மேகம் அசையாமல் அப்படியே நிலை கொண்டுள்ளது. அதனுடன் மேலும் மேலும் மேக கூட்டம் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. இன்னும் மேகங்கள் குவியும். குறைந்தபட்சம் இன்னும் 3 மணி நேரத்துக்காவது கனமழை கொட்டித்தீர்க்கும். இது பயமுறுத்துவதற்கான செய்தி அல்ல. மழை வெறித்து விட்டது என்று கருதி வெளியே சென்றவர்கள் எச்சரிக்கையாக இருங்கள். நாளை இன்னும் மழை தீவிரம் அடையக்கூடும் என்று பிரதீப் ஜான் கூறி உள்ளார். அதே போல் நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை பெய்த மழை அளவு சென்னையின் பல இடங்களில் 200 மில்லி மீட்டரை தாண்டி விட்டது என்றும் அவர் அதிர்ச்சி குண்டை போட்டுள்ளார். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் சென்னையை இன்னும் வெள்ளக்காடாக மாறும் அபாயம் உள்ளது.