எந்தெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்? | Chennai Meteorological Centre | Heavy rain warning
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் உள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக 7 நாட்களுக்கு மழை நீடிக்கும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழையும் ஓருசில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்றும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளையும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 17ம்தேதியும் மிக கன மழை பெய்யக்கூடும் 18ம்தேதி முதல் 21ம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.