உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தான் முகத்திரை கிழித்த உளவுத்துறை இயக்குநர் india canada| CSIS|Vanessa Lloyd

பாகிஸ்தான் முகத்திரை கிழித்த உளவுத்துறை இயக்குநர் india canada| CSIS|Vanessa Lloyd

பாகிஸ்தான் முகத்திரை கிழித்த உளவுத்துறை இயக்குநர் india canada| CSIS|Vanessa Lloyd கனடாவில் வசித்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியது, இந்தியா - கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு ஒத்துழைக்க மறுப்பதாக, கனடா ஓராண்டாகவே சொல்லி வருகிறது. இச்சூழலில், லாரன்ஸ் பிஷ்னோய் போன்ற சமூக விரோத கும்பல்களின் உதவியுடன், கனடாவில் வன்முறைகளை இந்தியா கட்டவிழ்த்து விடுவதாகவும், பல கொலைகளை அரங்கேற்றி வருவதாகவும், கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி சமீபத்தில் தெரிவித்தார். இது, இருநாட்டு உறவை மேலும் சீர்குலைத்தது. இதனால், டில்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற்றிய இந்தியா, கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவை திரும்ப அழைத்து கொண்டது. குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 6 இந்திய ஏஜென்ட்களை வெளியேற கனடா அரசு உத்தரவிட்டது. அவர்கள் மீண்டும் கனடாவுக்குள் நுழையவும் தடை விதித்தது. இச்சூழலில், இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக, கனடாவின் உளவு அமைப்பான கனடா செக்யூரிட்டி இன்டெலிஜென்ஸ் சர்வீசின் இயக்குநர் வனீசா லாயிட் கடந்த மாதம் தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கனடா அரசியல் களத்தில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் மதிப்பை குறைக்கும் பணியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் உள்ள காலிஸ்தானியர்களுக்கு அவர்கள் நேரடியாக ஆதரவு அளிக்கின்றனர் என்று வனீசா லயிட் கூறியிருக்கிறார். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியா-கனடா உறவில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வனீசாவின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை