உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சின்வாரின் தம்பி அடுத்த ஹமாஸ் லீடரா? | Hamas chief Yahya Sinwar | Hamas | Israel | Gaza

சின்வாரின் தம்பி அடுத்த ஹமாஸ் லீடரா? | Hamas chief Yahya Sinwar | Hamas | Israel | Gaza

சின்வாரின் தம்பி அடுத்த ஹமாஸ் லீடரா? | Hamas chief Yahya Sinwar | Hamas | Israel | Gaza இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு மூல காரணமாக இருந்தது கடந்த ஆண்டு அக்டோபர் 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு தான். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்டவரும் , ஹமாஸ் லீடருமான 61 வயது யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் வியாழனன்று தீர்த்து கட்டியது. அவரது மரணத்தை நேற்று ஹமாஸும் உறுதிப்படுத்தியது. காசாவின் தெற்கு பகுதியில் ராஃபா என்ற இடத்தில் இஸ்ரேல் ராணுவம் தரை வழி தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த ஒரு கட்டடத்தில் பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் சின்வாருடன் இருந்த 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இறந்தது சின்வார் தான் என்பதை உறுதி செய்த இஸ்ரேல், சின்வாரின் இறுதி காட்சிகள் என்ற ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருந்தது. அதில் டிரோன் மீது இடது கையால் அவர் கட்டையை தூக்கி எறியும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இந்த சூழலில் சின்வாரின் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தாக்குதலில் தலை பகுதியில் பலத்த காயமடைந்து சின்வார் நிலைகுலைந்து போனார். அவரது வலது கையும் உடைந்து ரத்தம் சொட்டியது. மின் கம்பியால் கட்டி உதிர போக்கை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அதன் பின் இஸ்ரேல் வீரர்கள் சுட்டதில் தலையில் குண்டு பாய்ந்து சின்வார் இறந்தார். அவரது விரலை வெட்டி எடுத்து இஸ்ரேல் ராணுவம் பரிசோதனைக்கு அனுப்பியது. அப்போது எடுத்த டிஎன்ஏ டெஸ்ட்டில் அது சின்வார் தான் என்பது உறுதியானது. இது தவிர சின்வார் இஸ்ரேல் சிறையில் பிணைக்கைதியாக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட கைரேகையுடனும் அது ஒத்து போனது. சின்வார் இறந்த 36 மணி நேரத்திற்குப் பிறகு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின் அவரது உடல் இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது என இஸ்ரேல் தடயவியல் நிறுவன இயக்குனர் டாக்டர் குகேல் கூறி உள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான போரை தொடர அடுத்த தலைவரை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. சின்வரின் இளைய சகோதரர் முகம்மது சின்வரை அடுத்த ஹமாஸ் தலைவராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ