உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அசாமில் நடந்த அசர வைக்கும் சம்பவம்! | AI Safety System | Elephants | Assam

அசாமில் நடந்த அசர வைக்கும் சம்பவம்! | AI Safety System | Elephants | Assam

அசாமில் நடந்த அசர வைக்கும் சம்பவம்! | AI Safety System | Elephants | Assam புதனன்று அசாமின் ஹபாய்பூர் ரயில் நிலையம் அருகே இரவு 8 மணி அளவில் யானை கூட்டம் ஒன்று தண்டவாளத்தை கடந்தது. அந்த நேரத்தில் வந்து கொண்டு இருந்த கம்ரூப் எக்ஸ்பிரஸ் ரயில் எமர்ஜென்சி பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 60 யானைகள் எந்த அபாயமும் இன்றி பாதுகாப்பாக கடந்து சென்றன. இங்கே யானைகளின் உயிரை காத்தது இன்றைய நவீன தொழில் நுட்பமான ஏஐ தான். ரயில் பாதைகளில் குறுக்கே வரும் இடர்பாடுகளை கணித்து தொலைவிலேயே எச்சரிக்கும் IDS (Intrusion Detection System) என்ற தொழில் நுட்பம் ரயிலில் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த எச்சரிக்கை வந்ததை தொடர்ந்து லோகோ பைலட் தாஸ் மற்றும் அசிஸ்டென்ட் லோகோ பைலட் உமேஷ் குமார் சாதுர்யமாக ரயிலை நிறுத்தி விபத்து ஏற்படாமல் தடுத்து உள்ளனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கிழக்கு மத்திய ரயில்வே தனது வரம்பிற்குட்பட்ட மற்ற அனைத்து யானை வழித்தடங்களிலும் படிப்படியாக இந்த தொழில் நுட்பத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வீடீயோவை தமிழக மருத்துவ செயலர் சுப்ரியா சாகுவும் பகிர்ந்துள்ளார். கோயம்புத்தூர் மதுக்கரையிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தி யானை- ரயில் மோதலை தடுத்துள்ளோம். ரயில் பாதைகளில் யானை வழித்தடங்கள் உள்ள அனைத்து பகுதிகளிலும் இது போன்ற முன்னெச்சரிகை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறி உள்ளார்.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை