யாஹ்யா சின்வார் பதுங்கிய இடம்; இஸ்ரேல் ஷாக் வீடியோ! | Yahya Sinwar tunnel | Hamas Leader | Israel
யாஹ்யா சின்வார் பதுங்கிய இடம்; இஸ்ரேல் ஷாக் வீடியோ! | Yahya Sinwar tunnel | Hamas Leader | Israel பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் ஓராண்டுக்கு மேலாக நீடிக்கிறது. இதுவரை 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பின் புதிய தலைவரான யாஹ்யா சின்வாரும் கொல்லப்பட்டது ஹமாஸ் அமைப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. காசாவின் ராஃபா என்ற இடத்தில் பதுங்கி இருந்த சின்வார் உட்பட 2 பயங்கரவாதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் தரை வழி தாக்குதலில் மாண்டனர். சின்வாருக்கு பின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஹமாஸ் ஆர்வம் காட்டி வருகிறது. கத்தாரில் வசிக்கும் முன்னாள் ஹமாஸ் அரசியல் பணியக தலைவர் காலித் மஷால், சின்வாரின் இளைய சகோதரர் முஹம்மது சின்வார் பெயரும் அடிபடுகிறது. இவர் ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவில் மூத்த தளபதியாக உள்ளார். இவர்கள் இருவர் தவிர ஹமாஸ் இராணுவப் பிரிவின் மூத்த தளபதியான ஹடாத் மற்றும் ரஃபா பிரிகேட் கமாண்டரான முகமது ஷபானா பெயரும் லிஸ்டில் உள்ளது. போர் துவங்க மூல காரணமே கடந்த ஆண்டு அக்டோபர் 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய வான் தாக்குதல் மற்றும் காசாவை ஒட்டிய எல்லை பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தான். இதில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலர் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டதும் மூளையாக செயல்பட்டதும் சின்வார் தான். அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின் சின்வார் அதிகம் பொதுவெளியில் வரவில்லை. இப்போது அது தொடர்பான முக்கிய ஆதாரங்களை கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.