உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிய வழிகாட்டுதல்கள் கொண்டு வரும் கர்நாடக அரசு multi stroyed building

புதிய வழிகாட்டுதல்கள் கொண்டு வரும் கர்நாடக அரசு multi stroyed building

புதிய வழிகாட்டுதல்கள் கொண்டு வரும் கர்நாடக அரசு multi stroyed building | Bangaluru |5 dead | heavy rain | பெங்களூருவின் பாபுசபால்யா Babusapalya பகுதியில் முனிராஜ் என்பவர் 7 மாடி கட்டிடம் கட்டி வருகிறார். பெங்களூருவில் 1 வாரமாக மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் கன மழை கொட்டியது. தொழிலாளர்கள் கட்டிடத்தின் உள்ளே வேலை செய்தனர். அப்போது அந்த கட்டிடம் திடீரென சரிந்து விழுந்தது உள்ளே இருந்த 20க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தேசிய பேரிடர் மீட்பு படை, பெங்களூரு மாநகராட்சி மீட்பு பணியில் ஈடுபட்டன. 14 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். பீகாரை சேர்ந்த 6 தொழிலாளர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கட்டிட உரிமையாளர் முனிராஜ் மற்றும் அவருடைய மகன் மோகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முனிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். மகன் மோகன் தலைமறைவாகிவிட்டார். விபத்து நடந்த இடத்தை கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பார்வையிட்டார். சட்டத்துக்கு புறம்பாக பெங்களூருவில் கட்டப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் உடனடியாக நிறுத்தப்படும் என கூறினார். கட்டிடம் இடிந்து தொழிலாளர்கள் இறந்த சம்பவம் துயரமானது. மழையால் அந்த கட்டிடம் இடிந்து விழவில்லை. மோசமான கட்டுமான பொருள்களை பயன்படுத்தி அடித்தளம் அமைத்திருந்தனர். சிறிய இடத்தில் உரிய அனுமதி இல்லாமல் 7 மாடிகள் கட்டுகின்றனர். பெங்களூருவில் கட்டுமான பணிகளுக்கு தரமான பொருள்களை பயன்படுத்துகின்றனரா என ஆய்வு செய்யப்படும். கட்டுமான பணிகள் முடிந்தாலும், அந்த கட்டடம் பயன்பாட்டுக்கு உரியதா? என்பது குறித்து ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படும். அதன் பிறகே அவர்கள் அந்த கட்டிடத்தை பயன்படுத்த முடியும். அதற்கான புதிய வழிகாட்டுதல்களை அரசு கொண்டு வர உள்ளது. சட்டத்துக்கு புறம்பாக கட்டட அனுமதி பெற்ற உரிமையாளர்கள், ஓப்பந்ததாரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அவர்களுக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார்.

அக் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ