உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெஞ்சு வலிப்பதாக நாடகமாடியவர் போலீசை கண்டதும் எஸ்கேப்! DMK Branch Secretary | Murder | Salem Attur

நெஞ்சு வலிப்பதாக நாடகமாடியவர் போலீசை கண்டதும் எஸ்கேப்! DMK Branch Secretary | Murder | Salem Attur

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கொசவன்காட்டை சேர்ந்தவர் சுப்ரமணியன் (45). திமுக கிளை செயலாளராக இருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகன் வயது 24. இருவருக்கும் விவசாய நிலத்துக்கு செல்லும் பொது வழித்தடம் தொடர்பான பிரச்னையில் முன்விரோதம் இருந்தது. ஒரு வாரத்துக்கு முன்பு காவல் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் முருகன் பைக்கில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கொசவன் காடு மக்காச்சோள காட்டில் அரிவாளுடன் மறைந்து இருந்த சுப்ரமணியன், திடீரென வெளியே வந்து முருகனை பைக்கில் இருந்து கீழே தள்ளிவிட்டார். கீழே விழுந்த முருகனின் தலை, கை, காலில் அரிவாளால் சராமாரியாக வெட்டி கொலை செய்தார். தொடர்ந்து ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு சென்ற சுப்ரமணியன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி தானாக பெட்டில் படுத்துக் கொண்டார். கொலை சம்பவத்தை கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு வந்த போலீசாரை பார்த்ததும் சுப்ரமணி மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்தார். இந்நிலையில் முருகனின் உறவினர்கள், சுப்ரமணியனை கைது செய்யக்கோரி, சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த சுப்பிரமணியனை பிடித்தனர். அவரை கைது செய்து விட்டதாக போலீசார் கூறிய பின், முருகனின் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆத்துார் ஊரக போலீசார், சுப்ரமணியனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை