உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஷேவிங் செய்து குறைகள் கேட்ட வீடியோ வைரல் | Rahul | MP Rahul | Congress | Rahul in Delhi salon

ஷேவிங் செய்து குறைகள் கேட்ட வீடியோ வைரல் | Rahul | MP Rahul | Congress | Rahul in Delhi salon

ஷேவிங் செய்து குறைகள் கேட்ட வீடியோ வைரல் | Rahul | MP Rahul | Congress | Rahul in Delhi salon லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் டெல்லியில் சாலையோரம் உள்ள சலூனுக்கு சென்று முடி திருத்தம் செய்து கொண்டார். அப்போது தொழிலாளர் அஜித் என்பவரின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக கருத்து கூறி உள்ள ராகுல்; முடி திருத்துபவர்கள் முதல் செருப்பு தைப்பவர்கள், குயவர்கள், தச்சர்கள் வரை வருமானம் வீழ்ச்சி அடைந்து விலைவாசி அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக உழைக்கும் வர்க்கத்தினரின் சொந்த கடை, வீடு மற்றும் சுயமரியாதை போன்ற கனவுகள் திருடப்பட்டு உள்ளன. வருமானத்தை அதிகரித்து, சேமிப்பை கொண்டு வரும் நவீன தீர்வுகள், புதிய திட்டங்கள்தான் இப்போதைய தேவை. திறமைக்கு உரிய தகுதியை பெற்று, கடின உழைப்பின் ஒவ்வொரு அடியும் வெற்றியின் ஏணியில் ஏற்றி விடும் சமுதாயம் இன்றைய தேவை எனவும் ராகுல் கூறி உள்ளார்.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை