உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஞ்சிபுரம் கோயில்களில் விதுசேகர பாரதீ சுவாமிகள் தரிசனம்! Sri Vidhusekhara Bharathi

காஞ்சிபுரம் கோயில்களில் விதுசேகர பாரதீ சுவாமிகள் தரிசனம்! Sri Vidhusekhara Bharathi

காஞ்சிபுரம் கோயில்களில் விதுசேகர பாரதீ சுவாமிகள் தரிசனம்! Sri Vidhusekhara Bharathi Swamiji | Sringeri | Vijaya Yatra கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு மாவட்டத்தில், துங்கபத்ரா நதிக்கரையில், சிருங்கேரி சாரதா பீடம் உள்ளது. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் பங்கேற்கும் விஜய யாத்ரா சென்னையில் நடக்கிறது. இதற்காக பெங்களூரில் இருந்து காஞ்சிபுரத்தில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்துக்கு, விதுசேகர பாரதீ சுவாமிகள் நேற்று இரவு வந்தார். இன்று காலை பூஜைகள் முடித்த பின் சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு விதுசேகர பாரதீ சுவாமிகள் சென்றார். அங்கு மனமுருக சாமி தரிசனம் செய்தார். பின் அருகில் உள்ள ஆதி காமாட்சி என அழைக்கப்படும் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றார். அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் மேள தாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மூலவர் காளிகாம்பாளை தரிசித்தார். பின் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாரதனை செய்து வழிபட்டார். விதுசேகர பாரதீ சுவாமிகள் மாலை உலகளந்த பெருமாள், கைலாசநாதர் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். காஞ்சிபுரம் கோயில் தரிசனத்தை முடித்து கொண்டு விஜய யாத்திரைக்காக நாளை மாலை சென்னை புறப்பட்டு செல்ல உள்ளார்.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ