உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சொத்து குவிப்பு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பின் விவரம் ops| admk| highcourt| ops case

சொத்து குவிப்பு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பின் விவரம் ops| admk| highcourt| ops case

சொத்து குவிப்பு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பின் விவரம் ops| admk| highcourt| ops case 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஓ பன்னீர் செல்வம் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 77 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக 2006ல் திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புதுறை வழக்கு பதிந்தது. ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ஓ ராஜா, அவரது மனைவி சசிகலாவதி மற்றொரு தம்பி ஓ பாலமுருகன் அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதியப்பட்டது. மதுரை கோர்ட்டில் நடைபெற்று வந்த வழக்கு, 2012ல் சிவகங்கைக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபின், ஓபிஎஸ் மீது வழக்கு தொடர்வதற்கு கொடுத்த அனுமதி திரும்ப பெறப்பட்டது. இதனால், குற்றச்சாட்டுகளுக்கு ஆதரங்கள் இல்லை எனக்கூறி வழக்கை திரும்ப பெறுவதாக சிவகங்கை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அறிக்கை தாக்கல் செய்தது. இதை ஏற்ற கோர்ட், பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை 2012ல் விடுவித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார். விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கினார். ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை திரும்ப பெற அனுமதித்து மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்த சிவகங்கை கோர்ட் உத்தரவை ரத்து செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி உள்ளிட்ட 2 பேர் இறந்துவிட்டதால், அவர்களுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது. எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் மதுரை சிறப்பு கோர்ட்டுக்கு வழக்கை நீதிபதி மாற்றினார். நவம்பர் 27 ம் தேதிக்குள் வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை கோர்ட்டுக்கு அனுப்ப சிவகங்கை கோர்ட்டுக்கு உத்தரவிட்டார். ஆவணங்களை பெற்ற பின் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும். நேரில் ஆஜர் ஆகிறவர்களுக்கு ஜாமின் வழங்கலாம். வழக்கை இழுத்தடிக்க முயற்சித்தால் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என மதுரை கோர்ட்டுக்கு அறிவுறுத்தினார். மதுரை கோர்ட், தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி அடுத்தாண்டு ஜூன் 31க்குள் முடிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ