சென்னை-போடி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு chennai-bodi superfast express train derailed
சென்னை-போடி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு chennai-bodi superfast express train derailed சென்னையில் இருந்து தேனி மாவட்டம் போடிக்கு வாரத்தில் மூன்று நாட்கள் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ரயில் கிளம்பும். இரவு 10:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 9 மணி அளவில் போடியை அடையும். நேற்று வழக்கமான நேரத்தில் சென்னை சென்டரலில் இருந்து போடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இன்று காலை 7 மணி அளவில் மதுரை ரயில் நிலையத்தின் 5வது பிளாட்பார்முக்கு வந்தடைந்தது. சில நிமிடங்களில் போடி நோக்கி ரயில் புறப்பட இருந்தது. ரயில் நகர ஆரம்பித்ததும் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. உடனே ரயிலை நிறுத்தி விட்டு, இன்ஜின் டிரைவர்கள் இறங்கி பார்த்தனர். மாற்றத்திறனாளிகளுக்கான பெட்டி தடம் புரண்டது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. உடனே ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இயந்திரங்கள் மூலம் தடம் புரண்ட பெட்டியை தண்டவாளத்தில் தூக்கி வைத்தனர். அந்த பெட்டியை பிரித்து ரயில்வே யார்டுக்கு கொண்டு சென்றனர். பின்னர் மற்ற ரயில் பெட்டிகள் இன்ஜினுடன் இணைக்கப்பட்டன. ஒன்றரை மணி நேரம் தாமதமாக மதுரையில் இருந்து போடி நோக்கி மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது.