உறுப்பினர்கள் பட்டியலில் தமிழகத்தில் 2 பேர் | Tirupati Devasthanam Board | Tirupati | B.R. Naidu
திருப்பதி தேவஸ்தான வாரியம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆந்திராவில் செய்தி தொலைக்காட்சி நடத்தி வரும் பி.ஆர்.நாயுடு, வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பல துறைகளை சேர்ந்த 24 பிரமுகர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து திருப்பூரை சேர்ந்த பி. ராம்மூர்த்தி, சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியும் அடங்குவர். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல்முறையாக நேற்று பி.ஆர்.நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். திருமலை திருப்பதி கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பல பிரச்னைகள் உள்ளன. அவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏற்கனவே பணியில் இருக்கும் இந்து அல்லாத ஊழியர்களை அரசின் பிற துறைகளுக்கு மாற்றுவதா, அல்லது அவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதா என்பது குறித்து ஆந்திர அரசுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் திருமலையில் பல ஊழல்கள் நடந்துள்ளன. கோயிலின் புனிதத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும். என் கடமையை நேர்மையுடனும், வெளிப்படை தன்மையுடனும் நிறைவேற்றுவேன் என்றார்.