உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் கட்சிக்கு ஆதரவா?; பாஜ நிலைப்பாடு என்ன? bjp| tvk| actor vijay|

விஜய் கட்சிக்கு ஆதரவா?; பாஜ நிலைப்பாடு என்ன? bjp| tvk| actor vijay|

விஜய் கட்சிக்கு ஆதரவா?; பாஜ நிலைப்பாடு என்ன? bjp| tvk| actor vijay| தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை, பிரமாண்டமாக நடத்தி காட்டி விட்டார் நடிகர் விஜய். திமுகவும், பாஜவும் என் எதிரி என சொன்னாலும், திமுகவைத் தான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். வரும் 2026ல், தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு நிச்சயம் உண்டு என திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு துாண்டில் போட்டுள்ளார் விஜய். இந்நிலையில், விஜய் கட்சி குறித்து பாஜ தலைமையின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பாஜ ஆலோசனை நடத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. திமுகவிற்கு எதிராக அரசியல் செய்யும் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்க வேண்டும்; திமுகவை ஒழிக்க வேண்டும். அதே நேரத்தில், அதிமுகவும் கலைந்து போக வேண்டும். எனவே, பாஜவை விஜய் கடுமையாக விமர்சனம் செய்தாலும், பாஜ தலைவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். விஜய்க்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என கட்சி தலைமை தற்போது முடிவெடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது பாஜவின் முக்கிய குறிக்கோள், மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்கள் தான்; எனவே, அதில் மும்முரமாக இறங்கியுள்ளனர் தலைவர்கள். இம்மாதம் 23ம் தேதி, இந்த இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும். அதற்குள், தவெக தொடர்பாக கட்சி மேலிடம் ஒரு இறுதி முடிவை எடுக்கும் என்கின்றனர் டில்லி பாஜ தலைவர்கள். அத்துடன், பிரிட்டனுக்கு சென்றுள்ள தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இம்மாத இறுதியில் தாயகம் திரும்புகிறார். விஜய் கட்சி விவகாரத்தில், தமிழக பாஜ எப்படி செயல்பட வேண்டும் என அண்ணாமலைக்கு பாஜ தலைமை தன் முடிவை தெரிவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை