அனுதாபம் தேடுகிறார் ராகுல்; வானதி விமர்சனம் | Congress | Rahul Speech | Wayanad Election | Vanathi S
அனுதாபம் தேடுகிறார் ராகுல்; வானதி விமர்சனம் | Congress | Rahul Speech | Wayanad Election | Vanathi Srinivasan வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் தனது சகோதரி பிரியங்காவை ஆதரித்து காங்கிரஸ் எம்பி ராகுல் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் தனது அப்பாவை கொன்றவரை கட்டி அணைத்தவர் பிரியங்கா என கண் கலங்கினார். இது தொடர்பாக பாஜ எம்எல்ஏ வானதி வெளியிட்டுள்ள அறிக்கை; ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா, நளினி சந்திப்பும் என்ற நூலில் வேலூர் சிறையில் பிரியங்கா தன்னை சந்தித்தபோது நடந்ததை நளினி பதிவு செய்துள்ளார். நான் கூறிய தகவல்களை கேட்டு பிரியங்கா கோபத்தின் உச்சிக்கு சென்றார். அவரது கோப கொந்தளிப்பு எனக்கு நடுக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து எதிர்ப்பு கேள்விகளை முன்வைத்தபடியே கோபத்தை கொட்டினார். அப்போது பார்லி தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்கு எங்கள் சந்திப்பை பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என நளினி கூறியிருக்கிறார். நளினியின் புத்தகம் குறித்து வெளியான விமர்சன கட்டுரையிலும் இந்த தகவல்கள் உள்ளன. உண்மை இவ்வாறு இருக்க, தந்தை ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி மீது பரிவு காட்டியவர் பிரியங்கா என ராகுல் பொய் சொல்லியிருக்கிறார். தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியும், ராகுலும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்பதற்கு வயநாட்டில் ராகுல் பேச்சே உதாரணம். தந்தை கொல்லப்பட்டு 17 ஆண்டுகளுக்கு பின் வேலூர் சிறைக்கு சென்று நளினியை சந்தித்த பிரியங்கா, ராஜிவ் உடன் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 16 குடும்பத்தினரையோ, அல்லது கொலை நடந்த போது காயம் அடைந்தவர்களையோ சந்திக்கவில்லை. அந்த காயத்தின் வடுக்களோடு இன்றும் வாழ்பவர்கள் மீது பரிவு காட்டவில்லை எனவும் வானதி விமர்சித்து உள்ளார்.