உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செயின் பறித்தவனை ஒரு கை பார்த்த மக்கள் | Chain Snatching | Trichy

செயின் பறித்தவனை ஒரு கை பார்த்த மக்கள் | Chain Snatching | Trichy

செயின் பறித்தவனை ஒரு கை பார்த்த மக்கள் | Chain Snatching | Trichy திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வையம்பட்டியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் லில்லி ராணி. வயது 64. வீட்டு வாசலை பெருக்கிக் கொண்டு இருந்தபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், துண்டு சீட்டில் எழுதியிருந்த முகவரியை காட்டி வழி கேட்டு உள்ளார். முகவரியை பார்க்க அல்லிராணி அருகில் சென்றபோது, அவர் அணிந்து இருந்த எட்டரை பவுன் தாலி செயினை அந்த நபர் பிடித்து இழுத்தார். சுதாரித்த அல்லிராணி, செயினின் மறுபக்கத்தை இறுக பிடித்தார். செயின் இரண்டாக அறுந்தது. சுமார் 6 பவுன் செயின் திருடன் கைக்கு போனது. அவன் அங்கிருந்து பைக்கில் பறந்தான். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர், திருடனை பிடிக்க பைக்கில் விரட்டி சென்றனர். திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை நோக்கி சென்ற திருடனை சுமார் 10 கிலோமீட்டர் துரத்தி சென்றனர். சினிமா பாணியில் சேஸிங் நடந்தது. கரட்டுப்பட்டி என்ற இடத்தில் கார் மீது மோதியதில் கீழே விழுந்த திருடன், பைக்கை விட்டுவிட்டு, அங்கிருந்த காட்டு பகுதிக்குள் ஓடினான். அவனை விரட்டி வந்தவர்களும் விடாமல் பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து வையம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். செயின் பறித்தவன் திண்டுக்கல், புதுப்பட்டியை சேர்ந்த 27 வயது குமார் என்பது விசாரணையில் தெரிந்தது. கீழே விழுந்ததில் அடிபட்டு இருந்ததால் அவனை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவனது பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

நவ 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை