உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தர்மம் தான் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுக்கும் | Sringeri sannithanam arulasi

தர்மம் தான் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுக்கும் | Sringeri sannithanam arulasi

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், சென்னை மயிலாப்பூர் சுதர்மா இல்லத்தில் தங்கி விஜய யாத்திரை மேற்கொண்டுள்ளார். 8வது நாளாக நேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கியவர், மாலை சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மகாசுவாமி வித்யா மந்திர் பள்ளிக்கு வருகை தந்தார். பள்ளி நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை, வேத மந்திரங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் உள்ள வேத பாடசாலையை சன்னிதானம் பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டுள்ள பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர்களின் சிலையையும் பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மத்தியில், சன்னிதானம் அருளுரை வழங்கினார்.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ