விரக்தியில் நடந்து போன திமுக நிர்வாகி | DMK | Udhayanidhi
விரக்தியில் நடந்து போன திமுக நிர்வாகி | DMK | Udhayanidhi விழுப்புரத்தில் நடந்த பல்வேறு அரசு விழாக்களில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றார். அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி வளாகத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். உதயநிதி வருகைக்கு முன்னதாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். 50க்கும் மேற்பட்ட பெண்களை உதயநிதி வரும் வழியில் பூக்கள் தூவ அழைத்து வந்திருந்தனர். அவர்களை விழா நடக்கும் இடத்துக்கு அரை கிலோ மீட்டர் முன்னதாகவே போலீசார் தடுத்து நிறுத்திவிட்டனர். கண்டமங்கலம் திமுக ஒன்றிய குழு தலைவர் வாசு, மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சீலா தேவி ஆகியோர்களின் வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டது. காரை வெளியில் நிறுத்திவிட்டு விழா நடக்கும் அரங்கிற்கு நடந்து போக சொல்லி போலீசார் அறிவுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வாசு நாங்க மக்கள் பிரதிநிதி தானே. எங்கள ஏன் உள்ளே விட மாட்டேங்குறீங்க? எல்லா விழாவிலும் இப்படி தான் நடக்குமான்னு பாக்குறேன். இங்கிருந்து 4 கிலோ மீட்டர் நடந்து போகனுமா என ஆவேசமாக கேட்டார். போலீசார் தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. அமைதியாக அங்கிருந்து நடந்து விழா நடக்கும் அரங்கிற்கு சென்றார்.