உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்த 25 பேரிடம் விசாரணை | Gold Smuggling at Chennai Airport

சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்த 25 பேரிடம் விசாரணை | Gold Smuggling at Chennai Airport

சிங்கப்பூரில் இருந்து சென்னை ஏர்போர்ட் வரும் விமானங்களில் குருவிகளாக செயல்படும் நபர்கள் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இன்று அதிகாலை வந்த இண்டிகோ விமானங்களில் வந்த 25 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அவர்களை அதிகாரிகள் சோதித்தனர். அவர்கள் கடத்தி வந்த தங்க கட்டிகள், செயின்கள், தங்க பசைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 25 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 8 பேர் பெண்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 20 கிலோ. அதன் மதிப்பு 15 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்க கடத்தல்காரர்களால் 25 பேரும் சிங்கப்பூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது விசாரணையில் தெரிந்தது.

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி