போலீஸ் விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி | Chennai School | School Toxic Smoke
சென்னை திருவொற்றியூர் கிராம தெருவில் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் ஒரு பக்கம் வகுப்பறையும், எதிர் பக்கம் வேதியியல் ஆய்வு கூடமும் உள்ளது. கடந்த அக்டோபர் 26ல் ஆய்வு கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிந்து மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு சில மாணவிகள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பிடலில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிவிட்டனர். பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அக்டோபர் 25, 26ல் பள்ளி வளாகத்தில் காற்று பரிசோதனை நடத்தினர். எந்த விதமான வாயு கசிவும் இல்லை என அக்டோபர் 28ம் தேதி அறிக்கை சமர்பிக்கப்பட்டது.