உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமாவளவன் வாய்ப்பூட்டு? பின்னணி என்ன | VCK crisis | Aadhav Arjuna | DMK vs VCK

ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமாவளவன் வாய்ப்பூட்டு? பின்னணி என்ன | VCK crisis | Aadhav Arjuna | DMK vs VCK

திமுக கூட்டணியில் சேர்ந்து 2019 லோக்சபா, 2021 சட்டசபை, 2024 லோக்சபா தேர்தல் என பல தேர்தல்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்தித்துள்ளது. இத்தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, தனது ஓட்டு வங்கியையும் அந்த கட்சி நிரூபித்துள்ளது. ஆனால் 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வெளியேறி விடும் என்ற தகவல் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணி அல்லது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து, அந்த கட்சி பயணிக்க இருப்பதாகவும் தகவல் பரவுகிறது. இதை திருமாவளவன் முற்றிலும் மறுத்தார். ஆனால் விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுடனான கூட்டணியை உடைப்பதற்கு அச்சாரமிடுகிறார் என்று கட்சிக்குள் புயல் கிளம்பி இருக்கிறது

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ