உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுப்புலட்சுமி பேரன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு karnatic singer ms subbulakshmi| award to t

சுப்புலட்சுமி பேரன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு karnatic singer ms subbulakshmi| award to t

சுப்புலட்சுமி பேரன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு karnatic singer ms subbulakshmi| award to tm krishna கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில், சங்கீத கலாநிதி விருதை ஆண்டுதோறும், சென்னை மியூசிக் அகாடமி வழங்கி வருகிறது. விருதுடன் 1 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும். 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது பாடகர் டிஎம் கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பரில் நடைபெறும் 98 வது மார்கழி மாத விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. டிஎம் கிருஷ்ணாவுக்கு எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க கர்நாடக இசை கலைஞர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி ஆகியோரும் எதிர்த்தனர். பிராமணர்கள் இனப்படுகொலை, பெண்களை பற்றி இழிவாக பேசிய ஈவெராவை பற்றி டி.எம்.கிருஷ்ணா பல்வேறு மேடைகளில் புகழ்ந்து பேசியுள்ளார். நமது கலாசாரத்தை இழிவுபடுத்தி பேசும் அவருக்கு விருது வழங்கும் நிகழ்வை புறக்கணிக்கிறோம் என்றனர். எம்எஸ் சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன், பாடகர் டிஎம் கிருஷ்ணாவுக்கு தமது பாட்டி பெயரில் விருது வழங்குவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். எனது பாட்டியை இழிவாக, அவதூறாக பேசியவர் டிஎம் கிருஷ்ணா. மலிவான விளம்பரத்திற்காக என் பாட்டியை விமர்சித்தவருக்கு அவரது பெயரிலேயே விருது வழங்குவது அதிர்ச்சி அளிக்கிறது. கர்நாடக இசை உலகில் நம்பகத்தன்மை இல்லாத ஒருவருக்கு எப்படி எங்கள் பாட்டி பெயரில் விருது வழங்கி கவுரவிக்க முடியும் என சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். மறைந்த கர்நாடக இசை பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருதை டிஎம் கிருஷ்ணாவுக்கு வழங்க சென்னை மியூசிக் அகாடமிக்கு தடை விதித்தார். எம்எஸ் சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை