உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை மோடி முன்பு பாராட்டிய இந்தோனேசிய அதிபர்! Indonesian President

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை மோடி முன்பு பாராட்டிய இந்தோனேசிய அதிபர்! Indonesian President

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை மோடி முன்பு பாராட்டிய இந்தோனேசிய அதிபர்! Indonesian President | Prabowo Subianto | PM Modi | Jaishankar பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 18, 19ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடந்தது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, நைஜீரியா, கனடா, பிரேசில், இந்தோனேசியா, இத்தாலி முதலான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாடுகளுக்கு இடையே தலைவர்களின் சந்திப்புகளும் நடந்தது. இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். சந்திப்புக்கு வந்த பிரதமர் மோடியை இன்முகத்துடன் இந்தோனேசிய அதிபர் வரவேற்றார். அப்போது இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கை குலுக்கி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். அப்போது பேசிய இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோ, எனக்கு உங்களைத் தெரியும். நீங்கள் மிகவும் பிரபலமானவர் என்றார். அவருடைய பாராட்டுக்கு வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார். இந்தோனேசிய அதிபரின் பாராட்டை கேட்ட பிரதமர் மோடியும் பலமாக சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடியை அவர் முதல் முறையாக சந்தித்தார். இரு நாடுகளும் தூதரக உறவுகளை உருவாக்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. அதை கொண்டாட இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்த சந்திப்பில், இரு நாட்டு ​​வர்த்தகம், சுகாதாரம், பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்தனர்.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி