பாஜவுக்கு இமாலய வெற்றி தந்த முஸ்லிம் கோட்டை Kundarki BJP won | BJP vs SP | Ramveer Singh | UP BJP
பாஜவுக்கு இமாலய வெற்றி தந்த முஸ்லிம் கோட்டை Kundarki BJP won | BJP vs SP | Ramveer Singh | UP BJP உத்தரப்பிரதேசத்தில் நடந்த 9 தொகுதி இடைத்தேர்தல் பாஜவுக்கு மீண்டும் எழுச்சியை கொடுத்து இருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியில் பாஜ நிறுத்திய இந்து வேட்பாளர் வெற்றி பெற்று கலக்கி இருக்கிறார். அவர் தன்னை எதிர்த்து நின்ற 11 முஸ்லிம் வேட்பாளர்களையும் காலி செய்து புது வரலாறு படைத்து இருக்கிறார். இது பற்றிய சுவாரஸ்ய பின்னணியை பார்க்கலாம். உத்தரப்பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடந்த 9 தொகுதிகளில் குண்டர்கி Kundarki தொகுதியும் ஒன்று. இங்கு முஸ்லிம் மக்கள் தான் கணிசமாக வசிக்கின்றனர். மொத்தம் 3.80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 62 சதவீத வாக்காளர்கள் முஸ்லிம்கள். அப்படி என்றால் எவ்வளவு கணிசமான அளவில் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள் என்று பாருங்கள். இதனால் குண்டர்கி தொகுதியின் வெற்றியை தனிப்பெரும் சமூகமாக தீர்மானிப்பவர்கள் முஸ்லிம்கள் தான். எனவே கட்சிகள் பொதுவாக முஸ்லிம் வேட்பாளர்களையே நிறுத்துவது வழக்கம். அதிலும் இந்த தொகுதி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி கோட்டையாகவே இருந்து வருகிறது. அவர் நிறுத்தும் முஸ்லிம் வேட்பாளர் தான் பொதுவாக வெற்றி பெறுவார். கடந்த 2022 தேர்தலிலும் அகிலேஷ் கட்சி தான் வென்றது. அவர் நிறுத்திய Zia Ur Rehman, பாஜ வேட்பாளர் கமல் குமாரை 43,162 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். பின்னர் 2024 லோக்சபா தேர்தல் போட்டியிலும் Zia Ur Rehman களம் இறங்கி வென்றதால், குண்டர்கி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இந்த முறை ராம்வீர் சிங் என்பவரை பாஜ நிறுத்தியது. அவரை எதிர்த்து முகமது ரிஸ்வான் என்பவரை அகிலேஷ் களம் இறக்கினார். ரிஸ்வான் சாதாரண ஆள் இல்லை. 40 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்டவர். ஏற்கனவே குண்டர்கி தொகுதியில் 3 முறை வென்றவர். எனவே அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அகிலேஷ் கருதினார். இதே போல் மற்ற கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என களம் இறங்கிய அனைவருமே முஸ்லிம்கள். மொத்தம் 12 பேர் போட்டி களத்தில் நின்றனர். பாஜ வேட்பாளர் ராம்வீர் சிங்கை தவிர மற்ற 11 பேரும் முஸ்லிம்கள். ஆனால் அனைவரையும் தோற்கடித்து இமாலய வெற்றியை பெற்று புது வரலாறு படைத்து விட்டார் பாஜவின் ராம்வீர் சிங். மொத்தமுள்ள 3.80 லட்சம் வாக்காளர்களில் 2.20 லட்சம் பேர் வரை ஓட்டுப்போட்டு இருந்தனர். இதில் 1.70 லட்சத்துக்கும் அதிகமான ஒட்டை ராம்வீர் அறுவடை செய்தார். 76 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் அவருக்கு ஓட்டுப்போட்டு இருக்கின்றனர். அடுத்த இடத்தில் இருக்கும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் 15 சதவீத ஓட்டு கூட வாங்கவில்லை. இதன் மூலம் 30 ஆண்டுக்கு பிறகு மீண்டும் குண்டர்கி தொகுதியில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 1993ல் தான் இங்கு பாஜ வெற்றி பெற்று இருந்தது. தேர்தலின் போது பாஜவை முஸ்லிம் விரோத கட்சி என்று அகிலேசும் அவரது கட்சியினரும் கடுமையாக சாடினர். ஆனால் முஸ்லிம் மக்கள் மனதை வெல்ல முன்பு எப்போதும் இல்லாத அளவு பாஜ கடுமையாக போராடியது. குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த தொகுதியை குறி வைத்து தீவிர பிரசாரம் செய்தார். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அசாத்திய வளர்ச்சி சாத்தியம். இரு கைகள் சேர்ந்தால் தான் ஓசை வரும் என்று யோகி பேசினார். அவரது ஆக்ரோஷமான பிரசாரமும், பாஜவினரின் முயற்சிக்கும் நல்ல பலன் கிடைத்தது. முஸ்லிம் மக்கள் அப்படியே பாஜ பக்கம் சாய்ந்தனர். இன்னொரு பக்கம் சமாஜ்வாடி கட்சியில் கோஷ்டி சண்டை முற்றியது. அதிகாரத்துக்காக தலைவர்கள் பகிரங்கமாக சண்டையிட்டனர். இதுவும் பாஜவுக்கு அனுகூலமானது. பாஜவின் ராம்வீர் சிங்கை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களுமே டிபாசிட் இழந்தனர். அகிலேசின் பிரிவினைவாத அரசியல் குண்டர்கி மக்களிடம் எடுபடவில்லை என்று அடித்து சொல்கிறது பாஜ.