இந்துக்களை திரட்டி போராடிய துறவி நிலை என்ன? Hindu Leader Krishna Das Prabhu
இந்துக்களை திரட்டி போராடிய துறவி நிலை என்ன? Hindu Hindu Leader Krishna Das Prabhu arrested Bangladesh violence ISKON Devotees Protest Suvendu Adhikari bjp pm modi EAM Jaishankar வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வன்முறை வெடித்தது. இந்தியாவில் அவர் தஞ்சம் புகுந்தார். அப்போது துவங்கி, இன்று வரை, வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்துக்களின் வழிபாட்டு தலங்கள், வீடுகள், சொத்துகள், தொழில் நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சில இந்துக்கள் கொல்லப்பட்டனர். அடக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்து மதத்தை பாதுகாக்கும் நோக்குடனும் இந்து அமைப்புகள் ஒன்று பட்டு போராட்டத்தில் ஈடுபட்டன. சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடியும் வலியுறுத்தினார். அதன் தொடர்ச்சியாக, வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், இந்து மத தலைவர்களை இரண்டு மூன்று முறை சந்தித்து சமாதானப்பேச்சு நடத்தினார். இந்துக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பிறகும்கூட வன்முறைகள் தொடர்ந்தன. உரிமைகளை கேட்டு வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சனாதன் ஜக்ரன் மஞ்ச் என்ற அமைப்பின் சார்பில் சிட்டகாங் நகரில் உள்ள மைதானத்தில் அக்டோபர் இறுதியில் மாபெரும் பேரணி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்றனர். பல கட்ட போராட்டங்களை இந்துக்கள் நடத்தியதால் அச்சுறுத்தல்கள் வந்தன. ஜமாத்-இ-இஸ்லாமி உள் ளிட்ட அடிப்படைவாத அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள், போராட்டத்தில் ஈடுபடுவதாக இருந்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள் என பகிரங்கமாக எசசரிக்க துவங்கினர். இதனால் இந்துக்கள் அச்சத்தில் இருந்து வந்தநிலையில், போராட்டம் நடத்திய ஹிந்து மத அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் மீது வங்கதேச போலீசார் வழக்குப்பதிவு செய்ய துவுங்கினர். போராட்டத்தை முன்னின்று நடத்திய இந்து மத அமைப்பின் முக்கிய தலைவர் கிருஷ்ண தாஸ் பிரபு மீது போலீசார் தேசதுரோக வழக்கை பதிவு செய்தனர். இந்தியா செல்ல டாக்கா விமான நிலையத்துக்கு இன்று வந்த அவரை டாக்கா போலீசார் கைது செய்தனர் இவர் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்திலும் அங்கம் வகிக்கிறார். கிருஷ்ணதாஸ் பிரபு கைது பற்றி அறிந்ததும் வங்கதேச இந்துக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். துறவி கிருஷ்ணதாஸ் பிரபு கைது கண்டித்து வங்கதேசத்தில் பல இடங்களில் இந்துக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டாக்கா, சிட்டகாங், பரிசல், குல்னா போன்ற இடங்களில் சாலை மறியலிலும் இந்துக்கள் ஈடுபட்டனர். இந்து மதத்தை பாதுகாக்க இறுதி வரை போராடுவோம்; நீதி கேட்டு நடக்கும் போராட்டத்தில் உயிரை கொடுக்கவும் தயங்க மாட்டோம் என இந்துக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என, மேற்கு வங்க பாரதிய ஜனதா தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தியுள்ளார். கிருஷ்ணதாஸ் பிரபுவை போலீசார் கடத்திச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது யூனுஸ் தலைமையிலான அரசு எந்த இழிவான செயலையும் செய்யும் என்பதால் இந்துக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, ஜெய்சங்கர் தலையிட்டு, கிருஷ்ண தாஸ் பிரபுவை விடுவிக்க வங்கதேச அரசுடன் பேச வேண்டும் என சுவேந்து அதிகாரி வலியுறுத்தினார்.