உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசியலமைப்பை மோடி படித்து இருந்தால் இதை செய்ய மாட்டார் modi| rahul| constitution day

அரசியலமைப்பை மோடி படித்து இருந்தால் இதை செய்ய மாட்டார் modi| rahul| constitution day

அரசியலமைப்பை மோடி படித்து இருந்தால் இதை செய்ய மாட்டார் modi| rahul| constitution day அரசியல் அமைப்பு தினத்தை ஒட்டி டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் உரையாற்றினார். அரசியல் அமைப்பு தினத்தையொட்டி பிரதமர் மோடியும், பாஜவும் பாலிர்மென்டில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அரசியல் அமைப்பு பற்றி பிரதமர் மோடி படிக்கவே இல்லை என்று நான் உறுதியுடன் கூறவேன். அப்படி அவர் படித்து இருந்தால் இப்போதும் செய்யும் எதையும் அவர் செய்ய மாட்டார். அரசியல் அமைப்பு என்பது வெறும் புத்தகம் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான இந்தியாவின் சிந்தனை. அது, உண்மை, அகிம்சை பற்றியது. தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது வரலாற்று நடவடிக்கை. காங்கிரஸ் ஆட்சி அமையும் மாநிலங்களில் இதனை நாங்கள் செய்வோம். நாட்டின் ஒட்டுமொத்த அமைப்புகளும் தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக உள்ளது. இவர்களுக்கு எதிராக ஒரு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதை பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வலுப்படுத்தி வருகின்றனர் என ராகுல் கூறினார். ராகுல் பேசிக்கொண்டு இருந்தபோது மைக் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆப் ஆனது. பின்னர் அது சரி செய்யப்பட்டதும் ராகுல் பேச்சை தொடர்ந்தார். 3000 ஆண்டுகளாக தலித்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஏழைகள் பற்றி யாரேனும் பேசினால் அவர்களின் மைக் ஆப் செய்யப்படுகிறது. அப்படி ஆப் ஆகும்போது, என்னை இருக்கையில் அமரும்படி கூறுகின்றனர். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நான் உட்கார மட்டேன். உங்கள் விருப்பப்படி மைக்கை ஆப் செய்துகொள்ளுங்கள். நான் பேச வேண்டியதை பேசுவேன் என ராகுல் கூறினார்.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !