உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெங்கல் புயல் வானிலை மையம் முக்கிய தகவல் ! | Cyclone Fengal Alert | Heavy rain | IMD Alert

பெங்கல் புயல் வானிலை மையம் முக்கிய தகவல் ! | Cyclone Fengal Alert | Heavy rain | IMD Alert

பெங்கல் புயல் வானிலை மையம் முக்கிய தகவல் ! | Cyclone Fengal Alert | Heavy rain | IMD Alert வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் பெங்கல் புயலாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கில் 400 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 590 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்னதாக வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. இப்போது அதன் வேகம் 13 கி.மீட்டராக அதிகரித்துள்ளது. புயலாக மாறிய பின் அடுத்த 2 நாட்களில் தமிழக, இலங்கை கரையை நோக்கி நகரும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. புயல் எந்த பகுதியில் கரையை கடக்கும் என இது வரை உறுதியாகவில்லை. அதன் பாதை மட்டுமே கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கரையை கடக்கும் நேரத்தில் புயலாக கரையை கடக்காமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் காலை முதல் மழையும், சென்னை, திருவள்ளுர், புதுச்சேரி பகுதியில் கடல் சீற்றமும் காணப்படுகிறது.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை