உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவர்கள் கண்டனம்! | Tirupur Crime | Annamalai | Palanisami | MKstalin

முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவர்கள் கண்டனம்! | Tirupur Crime | Annamalai | Palanisami | MKstalin

திருப்பூர் சேமலை கவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் தாய், தந்தை மற்றும் மகன் என மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சம்பவத்தை கண்டித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் அறிக்கை; திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. நடக்கும் தொடர் குற்றங்கள், இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன. தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் ஸ்டாலினின் திமுக அரசுக்கு கடும் கண்டனம். கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, சட்டம் ஒழுங்கை காக்க இனியாவது செயல்படுமாறு வலியுறுத்துவதாகவும் பழனிசாமி கூறி உள்ளார்.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை