உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நெருங்கி வரும் பெஞ்சல் புயல்

மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நெருங்கி வரும் பெஞ்சல் புயல்

மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நெருங்கி வரும் பெஞ்சல் புயல் தென்கிழக்கு வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல், சென்னைக்கு அருகே 190 கி.மீ தூரத்தில் உள்ளது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று பிற்பகலில், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். புயல் காரணமாக, திருச்சி, மங்களூரில் இருந்த சென்னைக்கு இயக்கப்படும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பலத்த காற்று வீசும்போது, சிறிய கர விமானங்கள் பறப்பது பாதுகாப்பானதல்ல என்பதால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இது தவிர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வருகை புறப்பாடு என 9 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 9 விமானங்கள் ரத்துக்கு புயல் காரணமல்ல; அந்த நிறுவனம் எடுத்த முடிவு என ஏர்போர்ட் அதிகாரிகள் கூறினர். பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று அதி கன மழைக்கு வாய்ப்புள்ளது. 9 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ